99. விர்த்தி வர்மம் – Virthi Varmam

வேறு பெயர்கள் :

1. விற்தி வர்மம் (வர்ம கண்ணாடி-500)
2. விர்த்தி வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)
3. விருத்தி வர்மம் (வர்ம லாட சூத்திரம்-300)

இடம் :

பெருவிரலின் நெருக்கு வர்மத்துக்கு ஒரு விரலளவுக்கு கீழே அமைந்துள்ளது.

இருப்பிடம் :

1. ‘நவிலுகின்ற பெருவிரலிறைக்கு மேலாம்
ஒன்றான விற்தி என்ற காலமாகும்
உரையதின் மேல் ரண்டிறைக்குள் சுண்டோதரி…’
(வர்ம கண்ணாடி-500)

2. ‘போமென்ற பெருவிரல் மொழி மேல் விர்த்திகாலம்’ (அடிவர்ம சூட்சம்-500)

3. ‘வெல்லுவார் பெருவிரலுக்கு மேலிறை ஒன்றில் விருத்தி’
(வர்ம லாட சூத்திரம்-300)

விளக்கம் :

இவ்வர்மம் பெருவிரலின் நெருக்கு வர்மத்துக்கு ஒரு விரலளவுக்கு கீழே அமைந்துள்ளது. சுண்டோதரி என்ற வர்மத்துக்கு அருகில் இவ்வர்மம் உள்ளது. பெருவிரலின் மொழிக்கு மேலே ஓர் இறைக்குள் இவ்வர்மம் உள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி