98. மந்தி வர்மம் – Manthi Varmam

வேறு பெயர்கள் :

1. முடிச்சி வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
2. மேக வர்மம் (வர்ம சாரி-205)
3. கூர்ச்சசிரம் (வர்ம விதி)
4. மந்தி வர்மம் (அடிவர்ம சூட்சம்)

இடம் :

இவ்வர்மம் பாதச்சக்கர வர்மத்துக்கு சுமார் 2 விரலளவுக்கு மேலாகவும், மணிபந்த வர்மத்திலிருந்து சுமார் 2 விரலளவுக்கு கீழாகவும் உள்ளது.

இருப்பிடம் :

1. ‘கேளப்பா பாதம் நடுமையத்தில் முடிச்சி வர்மம்’ (வர்ம நிதானம்-300)

2. ‘ஆமெனவே பாத சக்கர வர்மமாகும்
அதிலிருந்து நாலு விரலுக்கு உயரே பார்த்தால்
கோமெனவே காணும் கீழ் முடிச்சி வர்மம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

3. ‘மன்றனவே கொம்பேறி வர்மமொன்றும்
வளமான அதற்கு மூவிரலின் கீழே
ஒன்றனவே முன் நரம்பில் முடிச்சி மையம்’ (வர்ம கண்ணாடி-500)

4. ‘கண்ணுவர்மம் சமீபம் சுற்றளவெடுத்து இரண்டாக மடக்கினால் நரம்பு நடுக்கு, முடிச்சி வர்மம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

5. ‘பாதம் நடு மத்திபத்தில் முடிச்சி வர்மம்
ஐவிரல் முடிச்சியும் அற்று போனால்…..’ (வர்ம ஆணி-108)

6. ‘கூறு மணிபந்தங் கீழ் மேகவர்மம்’ (வர்ம சாரி-205)

7. ‘பாரடா யிறை ரண்டுக்கு உயரே அய்யா
பாங்கான முறிவு ஒன்று முறிந்ததானால்’ (வர்ம ஆணி-100)

8. ‘குற்ப சந்துவின் கீழிரண்டங்குலம்
சிற்ப கூர்ச்சசிரமெனும் வன்மமாம்’ (வர்ம விதி)

9. தேறு பட மையமது மந்தி காலம் (அடிவர்ம சூட்சம்)

விளக்கம் :

இவ்வர்மம் பாதசக்கர வர்மத்துக்கு சுமார் 2 விரலளவுக்கு மேலே காணப்படுகிறது (வர்ம ஆணி-108) மணிபந்த வர்மத்திலிருந்து சுமார் இரண்டு விரலளவுக்கு கீழே காணப்படுகிறது.இது கால் படத்தின் மையப்பகுதியில் காணப்படுகிறது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி