97. குண்டிகை காலம் – Kundigai Kalam
வேறு பெயர்கள் :
1. குண்டு வர்மம் (வர்ம சாரி-205)
2. குண்டிகை காலம் (வர்ம பீரங்கி-100)
3. குண்டுதிரி காலம் (வர்ம ஆணி-100)
4. மொழி குன்றிகைக் காலம் (வர்ம கண்ணாடி-500)
5. மொழி வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
இடம் :
கால் விரல்களிலுள்ள மொழிப்பகுதியில் உள்ளது.
பெயர்க்காரணம் :
கால் விரலிலுள்ள மொழிப் பகுதியில் குண்டு போன்று அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.
இருப்பிடம் :
1. ‘ஆரடா பெருவிரல் இடைமேல் குண்டுவர்மம்’ (வர்ம சாரி-205)
2. ‘விரல் மொழிக்குள் குண்டிகைக் காலமென்பர்’ (வர்ம பீரங்கி-100)
3. ‘நன்றான கால்விரலில் மொழி குண்டிகைக் காலம்’ (வர்ம கண்ணாடி-500)
4. ‘தேமென்ற விரல்மொழிக்கு கீழ் குண்டிகையாம் காலம்’ (அடிவர்ம சூட்சம்-500)
5. ‘தானென்ற செறுவிரலிடையில் சொல்வேன்
தாக்கடா குண்டுதிரி இதற்குப் பேரு’ (வர்ம ஆணி-100)
6. ‘பூமியென்ற காலத்துக்கும் இருவிரல் மேல்
பொருந்தி நிற்கும் மொழிவர்மம் பாரு’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
விளக்கம் :
ஒவ்வொரு விரலின் மொழிப் பகுதியில் இவ்வர்மம் உள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி