வேறு பெயர்கள் :
1. வெள்ளை வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
2. அடங்கல் வர்மம் (வர்ம சூத்திரம்-101)
3. கால் வெள்ளை வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)
4. உள்ளங்கால் வர்மம் (வர்ம விரலளவு நூல்)
5. அடிக்குழி (வர்ம விதி)
6. தலஹிருதயம் (சுஸ்ருத சம்ஹிதா)
இடம் :
உள்ளங்காலில் உள்ளது.
இருப்பிடம் :
1. ‘கீர்த்தியாம் பாதமதில் வெள்ளை வர்மம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
2. ‘சூட்சமடா வெள்ளையதில் அடங்கல் வர்மம்’ (வர்ம சூத்திரம்-101)
3. ‘படைமுறித்தான் வர்மத்துக்கு இரண்டு விரலுக்குக்
கீழே உள்ளங்கால் வர்மம் இந்த வர்மத்துக்கு
மூன்று விரலுக்குக் கீழே கால் கவளிக்காலம்’. (வர்ம விரலளவு நூல்)
4. ‘அவனிதனில் உள்ளங்கால் வெள்ளை வர்மம்’ (வர்ம பீரங்கி-100)
5. ‘அகமான உள்ளம் கால் வெள்ளை வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)
6. ‘கால் வெள்ளைதனில் உள்ளங்காலில் அடக்கமென்ற
தலமதில் உள்ளங்கால் வர்மம். நேர் மத்திபற்றி
முறிந்து போனால்…..’ (வர்ம ஆணி-108)
7. ‘முடியுமே உள்ளங்காலில் அடக்கமென்ற காலம்’ (வர்ம நிதானம்-500)
8. ‘ஆன காலி னடுவிரலினடியைப்பற்றி குதியளவாய்
ஈன மறவொன்றாலளந்தே யிரண்டாய் மடித்தாலிதன் நடுவில் ஆன வன்மமடிக்குழி……’ (வர்ம விதி)
விளக்கம் :
உள்ளங்காலின் நடுவில் இவ்வர்மம் அமைந்துள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி