86. ஆந்தை காலம் – Aanthai Kalam
வேறு பெயர்கள் :
1. ஆந்தை காலம் (வர்ம பீரங்கி-100)
இடம் :
முழங்கையின் நடுப்பகுதிக்கும், மணிக்கட்டு பகுதிக்கும் நடுவில் உள்ளது.
இருப்பிடம் :
1. ‘மோது மணிபந்தத்தின் நால்விரல் மேல் ஆந்தை’ (வர்ம பீரங்கி-100)
2. ‘……………………………………….. மணிபந்தம் தான்
வீரான விரல் நாலின் மேல் ஆந்தை வர்மம்’ (வர்ம கண்ணாடி-500)
3. ‘திண்டாகும் மணிக்கட்டு வந்த காலமாமே’
‘ஆகுமே விரல் நாலில் ஆந்தை காலம்’ (அடிவர்ம சூட்சம்-500)
4. ‘முழங்கையின் நடுக்கு வர்மத்திலிருந்து கீழ்நோக்கி (4 விரலளவு) அளவெடுத்தால் காணப்படும் இடத்தில் முறிவு ஏற்பட்டால் நாற்பத்தொன்று கழிக்க வேண்டும்’ (வர்ம நூலளவு நூல்)
விளக்கம் :
இவ்வர்மம் மணிபந்தத்துக்கு நான்கு விரலளவுக்கு உயரே உள்ளது. முழங்கையின் நடுக்கு வர்மத்திலிருந்து நான்கு விரலளவுக்கு கீழே காணப்படுகிறது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி