84. கை வெள்ளை வர்மம் – Kai Vellai Varmam

வேறு பெயர்கள் :

1. வெள்ளை வர்மம் (வர்ம கண்ணாடி-500)
2. குஞ்சு பிச்சாதி காலம் (வர்ம விளக்கம்)
3. அடிக்குழி (வர்ம விதி)
4. மு(மி)ன்னொளி வர்மம் (வ.சூ. பஞ்சீகரண பின்னல்-1500)
5. கருணசக்கிர காலம் (வர்ம ஆணி-100)
7. தல-ஹிருதயா (சுஸ்ருத சம்ஹிதா)

இடம் :

உள்ளங்கையின் நடுவில் உள்ளது.

இருப்பிடம் :

1. ‘தீரமுறும் நடுகை அகமே வெள்ளை வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)

2. ‘தேரான உள்ளங்கை வெள்ளை வர்மம்’ (வர்மகண்ணாடி-500)

3. ‘நன்றெனவே கை வெள்ளைக்குள்ளே யெல்லாம்’ (வர்ம சூத்திரம்-101)

4. ‘வேகமாம் வெள்ளையில் கைவெள்ளை வர்ம மொன்று’
(வர்ம லாட சூத்திரம்-300)

5. ‘உள்ளங்கையில் முக்கோண வாயுடே அகத்து
(வரைக்குள்) குஞ்சு பிச்சாதி காலம்’ (வர்ம விளக்கம்)

6. ‘காலமென்ற உள்ளங்கை நடுவில்தானே
கடினமதாம் கருணசக்கிர காலம் பாரு’ (வர்ம ஆணி-100)

விளக்கம் :

இவ்வர்மம் உள்ளங்கையின் நடுவில் உள்ளது. இதற்கு மறுபுறம் பாலசக்கர வர்மம் உள்ளது. வர்ம விளக்கம் என்ற நூல் கூறும் குஞ்சு பிச்(ஞ்)சாதி காலத்தின் இடமும், வெள்ளை வர்மத்தின் இடமும் ஒன்றாகவே உள்ளது. இந்த வர்மத்துக்கு ஒரு விரலளவுக்கு மேலே சற்றே பக்கவாட்டில் சொர்ண தெச்சண காலம் உள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி