83. சுண்டோதரி வர்மம் – Sundothari Varmam
வேறு பெயர்கள் :
1. சுண்டோதரி வர்மம் (வர்ம கண்ணாடி-500)
இடம் :
பெருவிரல் கவளி வர்மத்துக்கு அருகில், ஆள்காட்டி விரலுக்கு நேரே கீழேயுள்ள என்புக்கு ஓரத்தில் காணப்படுகிறது.
இருப்பிடம் :
1. ‘குறித்த பெருவிரலுக்கிடையில் சுண்டோதரி யென்பார்’ (வர்ம கண்ணாடி-500)
2. ‘வரும் பெரு விரலின் இடை சுண்டோதரியாம்’ (அடிவர்ம சூட்சம்-500)
விளக்கம் :
இவ்வர்மம் பெருவிரல் கவளி வர்மத்துக்கு அருகில் அதாவது ஒரு விரலளவுக்கு கீழே (Distal) ஆள்காட்டி விரலுக்கு அடியில் என்புக்கு ஓரத்தில் ஒட்டி காணப்படுகிறது. வர்ம விரலளவு நூல் குறிப்பிடும் அடுக்கு வர்மம், இடுக்கு வர்மம், முடுக்கு வர்மம் ஆகிய வர்மங்களின் வரிசையில் இவ்வர்மம் அமைந்துள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி