82. சூண்டோதரி வர்மம் – Soondothari Varmam
வேறு பெயர்கள் :
1. சூண்டோதரி வர்மம் (வர்ம கண்ணாடி-500)
2. சுண்டோதி வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)
இடம் :
இவ்வர்மம் ஒவ்வொரு மொழி வர்மத்துக்கு அருகில், சற்றே பக்கவாட்டுச் சரிவில் அமைந்துள்ளது.
இருப்பிடம் :
1. ‘…………………………………………தெட்சணையின் காலமென்பர்
மீதினிலோரிறை சூண்டோதரியாம் வர்மம்’ (வர்ம பீரங்கி-100)
2. ‘……………………………………….. தெட்சணையின் காலமொரு
கூறான யிதனிடையில் சூண்டோதரி வர்மம்’ (வர்ம கண்ணாடி-500)
3. ‘பதிவான தட்சிணையின் காலமாகும்
பாரமுறும் ஓரிறை மேலே சுண்டோதி வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)
4. ‘குண்டிடும் விரல் சுவட்டில் சூழ்ந்த சூண்டோதரியாம்’ (வர்ம லாட சூத்திரம்-300)
விளக்கம் :
இவ்வர்மம் ஒவ்வொரு விரலின் மொழி வர்மத்துக்கு அருகில் சற்றே பக்கவாட்டுச் சரிவில் அமைந்துள்ளது. ‘அடிவர்ம சூட்சம்-500’ என்ற நூல் தட்சணை வர்மத்துக்கு ஒரு விரலளவுக்கு மேலே (Distally) இவ்வர்மம் உள்ளதாகக் குறிப்பிடுகிறது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி