81. தெட்சணை காலம் – Thekshanai Kalam
வேறு பெயர்கள் :
1. தட்சணையின் காலம் (வர்ம பீரங்கி-100)
2. தெட்சணை வர்மம் (வர்மசாரி-205)
3. தெட்சணை எடுக்கும் காலம் (வழக்கு)
4. இடுக்கு வர்மம் (வர்ம விரலளவு நூல்)
பெயர்க்காரணம் :
சீடன் கையிலுள்ள தட்சணையை எடுக்க கைவிரல்களைத் திறக்க ஆசான் பயன்படுத்தும் வர்மமாகையால் இப்பெயர் பெற்றது.
இடம் :
உள்ளங்கை சொர்ண தட்சணை காலத்துக்கு நேரே மறுபுறம் உள்ள காலமாகும்.
இருப்பிடம் :
1. ‘வாரமுறு கரமதிலே ழங்குலத்தில்
மொழிபிறங்கண் தட்சணையின் காலமென்பர்’ (வர்ம பீரங்கி-100)
2. ‘வாரான கரமதிலே ஏழும் தானும்
வாழ்த்துகிறோம் மொழிபிறகண் தட்சணையின் காலம்’
(வர்ம கண்ணாடி-500)
3. ‘பண்பான தெட்சணை சுண்டோதரியாகும்’ (வர்மசாரி-205)
விளக்கம் :
இவ்வர்மம், உள்ளங்கையிலுள்ள சொர்ண தெட்சணை காலத்துக்கு நேரே மறுபுறம் (Dorsal) உள்ள வர்மமாகும். கரத்தின் விரல் நுனியிலிருந்து சுமார் ஏழு விரலளவுக்கு மேலே, நடு விரலுக்கும் மோதிர விரலுக்கும் இடையே மொழியுள்ள புறங்கை பகுதியிலுள்ள கவளியில் இவ்வர்மம் அமைந்துள்ளது. இது கையிலுள்ள நான்கு கவளி வர்மங்களுள் ஒன்றாகும். இது இடுக்கு வர்மம் (வர்ம விரலளவு நூல்) என்றும் வழங்கப்படுகிறது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி