78. நான்கு குற்றி காலம் – Nanku Kutti Kalam
வேறு பெயர்கள் :
1. நரங்குன்றி காலம் (வர்ம பீரங்கி-100)
2. நாங்கு குற்றி காலம் (வர்ம சாரி-205)
3. நரம்பு குத்தி காலம் (வர்ம கண்ணாடி-500)
இடம் :
ஆண்குறிக்கு அருகில் பக்கவாட்டில் உள்ளது.
இருப்பிடம் :
1. ‘மகிழும் வலம்புரி, இடம்புரி வர்மம்
வெல்லுறுமி, வல்லுறுமி நரங்குன்றி
மிகு நரங்கல் மீதே அணிவர்மம்’ (வர்ம பீரங்கி-100)
2. ‘மன்றனவே எல்லுருமி வல்லுருமிக் காலம்
வரும் நரம்பு குத்தியோடு அறிவித்தோமே’ (வர்ம கண்ணாடி-500)
3. ‘கருதி நின்ற தண்டதுதான் விசையதாகும்
கற்மமடா விசையடுத்து நரங்குத்தி’ (வர்ம சாரி-205)
4. ‘பாலமென்ற நாங்கு குற்றி ரண்டு’ (வர்ம சாரி-205)
5. ‘அழகாக அதனருகில் வில்லுருவி என்பார்
ஏச்சுதே வில்லுருவி நரம்பு குத்திக் காலம்
இதில் விரல் நாலின் மேல் தான்
காச்சுதே அணிவர்மம் ஆகும் பாரு………….’ (வர்ம கண்ணாடி-500)
விளக்கம் :
‘வர்ம பீரங்கி-100’ என்ற நூலின் பாடல் அடியிலிருந்து இவ்வர்மம் புரிவர்மத்துக்கும், வெல்லுருமி வர்மத்துக்கும் அடுத்து காணப்படுகிறது என்று தெரிகிறது. விசை எனப்படும் ஆண் குறியின் அடிப்பகுதிக்கு அருகே இவ்வர்மம் காணப்படுகிறது. இவ்வர்மத்துக்கு நான்கு விரலுக்கு மேலே அணி வர்மம் காணப்படுகிறது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி