68. கைகூட்டு காலம் – KaiKoottu Kalam
வேறு பெயர்கள் :
1. கைகூட்டுக் காலம் (வர்ம கண்ணாடி-500)
2. கைகூட்டிக் காலம் (வர்ம திறவுகோல்-225)
இடம் :
கை உடலோடு கூட்டப்பட்டிருக்கும் இடத்தில் உள்ளது.
பெயர்க்காரணம் :
கை உடலோடு கூட்டப்பட்டிருக்கும் இடத்தில் உள்ள வர்மமாகையால் இப்பெயர் பெற்றது.
இருப்பிடம் :
1. ‘சூட்சமாம் அதற்குக் கீழ் கச்சை வர்மம்
சொல்லுவாய் அதற்கு மேல் கைகூட்டிக்காலம்’
(வர்ம திறவு கோல்-225)
2. ‘சூச்சமதுக்குங் கீழ் கச்சைக் காலம்
சொல்லுவாயதுக்குப் பின் கைகூட்டுக் காலம்’ (வர்ம கண்ணாடி-500)
3. ‘நணுகியதன் கீழ் கச்சைக் காலமென்பர்
கோணுமடைப்பின் மேல் கைக்கூட்டுக் காலம்’ (வர்ம பீரங்கி-100)
விளக்கம் :
இவ்வர்மத்தின் குறிகுணப்பாடலில் ‘கைப்புசமும் வீழ்ந்து போகும்’ (Dislocation of Shoulder) என்று கூறப்பட்டுள்ளதால் இவ்வர்மம் கைபுயப்பொருத்தின் பின் பகுதியில் அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. கோணுமடைப்பு என்ற அக்குளுக்கு மேலே இவ்வர்மம் உள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி