67. கட்டு வர்மம் – Kattu Varmam
கட்டு வர்மம் (42)
நூலான கட்டு வர்மத்தின் செய்தி
நன்றாக உரைப்பதினை நாடி கேளு
மேலான இடம் வீங்கி இரத்தம் கட்டும்
மெத்தவே களி கூர்ந்து இரையும் மூச்சு
சாலான சளியாகி பழுத்து சாயும்
சரசமாய் சிகிட்சைகள் தவறிற்றானால்
பாலான பத்தாண்டில் அகமே வந்து
பலதோசம் செய்யுமடா பதனம் தானே.