66. கச வர்மம் – Kasa Varmam

கச வர்மம் (41)

தானிந்த கச வர்மம் கொண்ட பேர்க்கு
தனிச் சூடாய் மூலத்தில் புகைச்சல் இரத்தம்
நானிந்த கிருமி அதிகரிக்கும் சொன்னோம்
நளினமாம் பீசமிது நீளும் சொன்னோம்
ஏனிந்த குறிதீர மருந்து தானும்
இதமான நாக செந்தூரம் கொள்ளு
கானிந்த அவுசதங்கள் பின்னாய் சொல்லே
கருணையோடு இசைவிட்ட நூலிதாமே.