64. முண்டு வர்மம் – Mundu Varmam

முண்டு வர்மம் (39)

கொண்டதொரு முண்டு வர்மம் கொண்டதானால்
குறுக்கு பிலமாகவே இருக்கொட்டாதே
கண்டதொரு கடிவிசம் போல் கடும் தரிப்பாய்
கண்ட அடிக்குறுக்கும் கண்டித்தாடும்
விண்டதொரு அக வியாதி வந்தால் கொல்லும்
வெறும் பனியாய் கழிந்திடுகில் வேறொன்றில்லை
பண்டதொரு காலமிதில் நின்று பார்த்து
பதித்து மனம் சிகிட்சையில் பற்றுவாயே.