62. ஏற்று வர்மம் – Eattu Varmam

குறிகுணம் :

ஏற்று வர்மம் (37)

விர்த்தியாம் ஏற்றுவர்மம் விபரம் கேளு
விறுவிறென விசை நரம்பு சூடு கொள்ளும்
விர்த்தியாய் விழுந்த புயம் உயரே ஏறும்
வரும் தரிப்பாய் உடன்மாறும் வரிசையாகும்
திர்ப்த்தியாய் எண்ணெய் இட்டு தடவ தீரும்
திடமான காலமிது சாத்தியமாகும்
பூர்த்தியாய் இதினுடைய குறி குணங்கள்
புகன்றபடி மறுகாலம் புகலுவேனே.