57. கிளிப்பிற வர்மம் – Kilipira Varmam
வேறு பெயர்கள் :
1. கிளிப்பிற வர்மம் (வர்ம சாரி-205)
2. கிழிப்பிறை வர்மம் (வர்ம பீரங்கி-100)
3. கிளிப்புற வர்மம் (வர்ம கண்ணாடி-500)
இடம் :
சடப்பிற வர்மத்துக்கு ஓர் இறை மேலே உள்ள இடம்.
இருப்பிடம் :
1. ‘பானென்ற அதினகத்து சிப்பிற வர்மம்
பகர்ந்த ஒரிறை மேலே கிளிப்பிற வர்மம்’ (வர்ம சாரி-205)
2. ‘பாலமென்ற கிழிபிற வர்ம மொன்று’ (வர்ம சாரி-205)
3. ‘………………………………………. சடப்பிறக் காலம்
இதுக்கிறையின் மீது கிழிப்பிறையாம் வர்மம்
இரண்டிறை மேல் கிளிமேக வர்மங்காணே’ (வர்ம பீரங்கி-100)
4. ‘………………………………………. சடப்புற வர்மம்
பாரிறைக்கும் மேலே கிளிப்புற வர்மமாமே
ஆமிந்த காலமதில் இறையோ ரெண்டு
அதின் மேலே கிளிமேக வர்மமென்பர்’ (வர்ம கண்ணாடி-500)
5. ‘பானென்ற வதினடுத்து சடப்பிர வர்மம்
பகரு மோரிறை மேலே கிளிப்பிர வர்மம்’ (வ.ஒ.மு. சாரி-1500)
விளக்கம் :
இவ்வர்மம் ஒற்றை வர்மமாகும். இதற்கு இரண்டு இறைக்கு மேலே கிளிமேக வர்மமும், ஓர் இறைக்குக் கீழே சடப்புற வர்மம் எனப்படும் சிப்பிர வர்மமும் உள்ளது. (ஒப்பு நோக்குக : கிளிமேக வர்மம்)
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி