47. பின் சருதி வர்மம் – Pin Saruthi Varmam
வேறு பெயர்கள் :
1. பின் சருதி வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)
2. பின் சுருக்கி வர்மம் (வர்ம விளக்கம்)
3. பின் சுருதி வர்மம் (வர்ம லாட சூத்திரம்-300)
இடம் :
சிறிய அத்தி சுருக்கி வர்மத்துக்கு நான்கு விரளவுக்குப் பக்கசரிவில் உள்ளது. முன் சருதி வர்மத்துக்கு கீழே உள்ளது.
இருப்பிடம் :
1. ‘கொள்ளவே சிறிய அஸ்திசுருக்கியின் பக்கச்சரிவில்
மெள்ளவே விரல் நான்கில் மொழிந்த முன்சருதிவர்மம்
நள்ளவே சருதிக்கும் கீழ் நாட்டம் பின் சருதி வர்மம்’ (வர்ம லாட சூத்திரம்-300)
2. ‘வானென்ற எல்லிரு விரல் மேலத்தானே
வருமுன் சருதியின் கீழ் பின்சருதி யென்று கூறு’ (அடிவர்ம சூட்சம்-500)
3. ‘அத்தி சுருக்கிக்கும் மூன்று விரலினும் ஒரு நெல்லினும் தாழ்வாக
பின் சுருக்கி வர்மம் உள்ளது’ (வர்ம விளக்கம்)
விளக்கம் :
இவ்வர்மம் சிறிய அத்தி சுருக்கி வர்மத்துக்கு நான்கு விரலளவுக்குப் பக்க சரிவில் அதாவது மையம் நோக்கி (Medial) அமைந்துள்ள முன் சருதி வர்மத்துக்கு நேரே கீழே அமைந்துள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி