36. குழிவு வர்மம் – Kuzhivu Varmam
வேறு பெயர்கள் :
1. குழிவு வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)
இடம் :
முலைக்கண்ணுக்கு ஓர் இறைக்குக் கீழே.
இருப்பிடம் :
‘நின முலைக்கண் ஓர் இறைக்குக் கீழ் குழிவு வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)
விளக்கம் :
இவ்வர்மம் முலைக்காம்புக்கு ஓர் இறைக்குக் கீழே அமைந்துள்ளது.
குறிகுணம் :
குழிவு வர்மம் (11)
கூறான வசவு வர்மம் சொன்னேன் இன்னும்
குருவான குளிவு வர்ம குறியைக் கேளு
மாறாது நெஞ்சு முதல் தேகமெல்லாம்
மறுகவே குத்திருமல் உடனுண்டாகும்
நீறாகி தேகமெல்லாம் வெதும்பிக் காணும்
நிச்சயமாய் அடிக்கடி ஓர் கூறும் காணும்
வேறாகும் அன்பதென்ற நாழிகையினுள்ளே
வேதனையாம் அசாத்தியம் என்றறிந்திடாயே.
அடிவர்ம சூட்சம்-500 : நெஞ்சு முதல் உடல் முற்றும் குத்து உண்டாகும். இருமல் வரும். தேகம் வெதும்பிக் காணும் குறிகுணங்கள் அடிக்கடி வேறுவேறாய் மாறும்.
அவதி :
51 நாழிகைக்கு பின் அசாத்தியம்.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி