- ஏந்திக் காலம் – Eanthi Kalam
வேறு பெயர்கள் :
- ஏந்தி காலம் (வர்ம பீரங்கி-100 / வர்ம சாரி-205)
- ஏந்திரக் காலம் (வர்மானி-16)
- அபலாபங்கள் (சுஸ்ருத சம்ஹிதா)
இடம் :
திவளை வர்மத்துக்கு ஒரு விரலளவுக்கு புறப்பக்கவாட்டில் (Lateral) உள்ளது.
இருப்பிடம் :
- ‘அப்பனே திவளை வர்மமாகும் பாரு
சதிரான விலாவிலொரு இறையில் தானே
சாரு வலமேந்தி யிருபுறமுமென்பார்’ (வர்ம கண்ணாடி-500)
- ‘எல்லின் கீழ்ரண்டதிலே திவளைக் காலம்
களிவில்லா தோரிறையின் வலமே ஏந்தி
காலமே இருபுறமும் கண்டு கூறே’ (வர்ம பீரங்கி-100)
- ‘சத்தியென்ற காரையின் கீழ் திவளை வர்மம்
சாற்றுகிறேன் ஓரிறை வல மேந்தி வர்மம்’
(வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)
- ‘பாங்கானயேந்தி ரண்டு………………………..’ (வர்ம சாரி-205)
- ‘காரை ரண்டு விரலினும் கீழ் திவளைக்காலம்
காணும் ஓரிறை வலத்தே யேந்திக் காலம்’ (வர்மானி-16)
- ‘அப்பனே திவளை வர்மமாகும் பாரு
கதிரான விலாவிலொரு இறையில்தானே
காரு வல மேந்தி யிருபுறமுமாமே’ (வர்ம திறவு கோல்-225)
விளக்கம் :
இவ்வர்மம் திவளை வர்மத்துக்கு ஒரு விரலளவுக்கு புறப்பக்கவாட்டில் (Lateral) அமைந்துள்ளது. இது மையக் கோட்டிலிருந்து சுமார் ஆறு விரலளவுக்குப் பக்கவாட்டில் உள்ளது. காரெல்லுக்கும் (Clavicle Bone) சுமார் இரு விரலளவுக்குக் கீழாக அமைந்துள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
- வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி