- சங்குதிரி காலம் – Chankuthiri Kalam
வேறு பெயர்கள் :
- சங்கு முடிப்பு வர்மம் (வர்ம கண்டி)
- சங்குதிரி காலம் (வர்ம பீரங்கி-100)
- சங்குதிருகி வர்மம் (சதுரமணி சூத்திரம்)
- சங்கு பூட்டுகாலம் (தொடு வர்ம நிதானம்)
பெயர்க்காரணம் :
கழுத்திலுள்ள ‘சங்கு’ எனப்படும் குரல் எழுப்பும் குரல் வளையில் இவ்வர்மம் உள்ளதால் ‘சங்குதிரி எனப்பெயர் பெற்றது. இதிலுள்ள ‘முடிச்சு’ போன்ற பகுதியிலுள்ளதால் ‘சங்கு முடிச்சுவர்மம்’ எனவும் பெயர் பெற்றது.
இடம் :
முன் கழுத்தின் சங்குமுடிச்சு (Adams Apple) பகுதியில் உள்ளது.
இருப்பிடம் :
- ‘ஆமப்பா குரல் வளையில் சங்குதிரி காலம்
அதன் கீழ் நாலங்குலத்தில் சுமை வர்மந்தான்’
(வர்ம பீரங்கி-100)
- ‘அறிவான குரல் வளையில் சங்குதிரி காலம்
அதற்குக் கீழ் அங்குலம் நாலில் சுமைவர்மந்தான்’ (வ.க.-500)
- ‘கொம்பேறி காலத்திற்கும் ஆறு விரலின்கீழ் சங்கு முடிப்பு வர்மம்’
(வர்ம கண்டி)
- ‘காணே நீ மூவிரல் மேல் சங்குதிருகி
கருதுவாய் இருவிரல் மேல் உள்நாக்கு வர்மம்’ (சதுரமணி சூத்திரம்)
விளக்கம் :
சங்கு முடிச்சுப் பகுதியிலுள்ள வர்மமாகையால் சங்கு முடிச்சு அல்லது சங்குதிரி வர்மம் எனப்படுகிறது. இது குரல்வளையில் காணப்படுகிறது. தும்மி வர்மத்துக்கு மூன்று விரலுக்கு உயரே இவ்வர்மம் அமைந்துள்ளது.
கொம்பேறி வர்மத்துக்கு ஆறு விரலுக்குக் கீழே இவ்வர்மம் அமைந்துள்ளதாக ‘வர்ம கண்டி-உரைநடை’ என்ற நூல் குறிப்பிடுகிறது. இது தவறு கொம்பேறியிலிருந்து நேரே அளவெடுத்துப் பார்த்தால் இது சரியானது தான் ஆனால் கீழ்த்தாடையின் (நாடிக்கு) கீழ் பகுதியை ஒட்டி அளந்தால் பத்து விரலிடை என்பதே சரியானது.
‘வர்ம கண்ணாடியும்’, ‘வர்ம பீரங்கியும்’ சுமை வர்மத்துக்கு நான்கு விரலுக்கு மேலே இவ்வர்மம் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது.
மாத்திரை :
2 விரல் கொண்டு பிடித்து அரை விரல் வீதம் அசைத்து, ஒரு விரல் தாழும் போது மயங்கும். (வர்ம விளக்கம்)
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
- வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.