105. முடவு வர்மம் – Mudavu Varmam

முடவு வர்மம் (12)

என்றதோர் முடவு வர்மம் குறியை கேளு
எளிதாக முட்டுக்கு கீழ் குத்துளைவு
நின்றதோர் வீக்கமுடன் சன்னி கூடும்
நிலையான நாள் எட்டில் சீதமாகும்
கன்றதொரு கண் மயக்கம் சோகம் தீர
சுகமான தடவு முறை எளிதாய் செய்து
வென்றதொரு எண்ணெயிட தீர்ந்து சும்மா
விகிதமாய் போகும் இது உண்மை தானே. (186)