102. கண்ணு புகைக் காலம் – Kannu Pugai Kalam
வேறு பெயர்கள் :
1. கண்ணுபுகை வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. கண்ணு புகையும் காலம் (அடிவர்ம சூட்சம்-500)
இடம் :
இவ்வர்மம் முடிச்சு வர்மத்துக்கு மூன்று விரலளவுக்கு புறப்பக்கவாட்டில் உள்ளது.
இருப்பிடம் :
1. ‘மன்றான படமதிலே பட வர்மந்தான்
மாறவே கண்ணு புகைக் காலமென்றே’ (வர்ம கண்ணாடி-500)
2. ‘பாமென்ற சுண்டோதரி வர்மம் மீதி
படவர்மம் கண்ணுபுகைக் காலமெண்ணே’ (வர்ம பீரங்கி-100)
3. ‘அடிபடமே படவர்மம் மேலே கண்ணுபுகையும் காலம்’ (அடிவர்ம சூட்சம்-500)
விளக்கம் :
இவ்வர்மம் முடிச்சு வர்மத்துக்கு மூன்று விரலளவுக்கு புறப்பக்கவாட்டில் (Lateral) அமைந்துள்ளது. சுண்டோதரி வர்மம்-பட வர்மம்-கண்ணுபுகைக் காலம் ஆகிய மூன்று வர்மங்களும், காலின் புறங்கால் பட பகுதியில் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. இக்கோடு பெருவிரலுக்கு அருகில் ஆரம்பித்து பட பகுதியை குறுக்காக கடந்து, புறப்பக்க கரண்டைக் கண்ணு வர்மத்துக்கு அருகில் முடிகிறது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி