10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam

வேறு பெயர்கள் :

1. காம்பூரி காலம் (வர்ம பீரங்கி-100)
2. காம்போதிக் காலம் (வர்ம கண்ணாடி-500)
3. அலவு காம்பூரி வர்மம் (வர்ம விரலளவு நூல்)
4. அலவு காம்போதி அடங்கல் (அடங்கல் விவரம்)

இடம் :

நட்சத்திர வர்மத்துக்கு இரண்டு இறைக்கு கீழே அமைந்துள்ளது.

இருப்பிடம் :

1. ‘வளமான கண்ணின் கீழ் நட்சத்திரக் காலம்
கற்மமடா ரண்டிறை கீழ் காம்பூரிக் காலம்
கருது மூன்றிறைவலத்தே மூர்த்தி வர்மமே’ (வர்மசாரி-205)

2. ‘……….நட்சத்திரகாலம் எண்ணே
எண்ணவே அதற்கு இரண்டிறைக்கும் கீழே
இதமான காம்போதிக் காலமாகும்.
திண்ணவே இதற்கு மேல் வலம் இறை மூன்றில்
திருக்கான மூர்த்தி என்ற காலமென்பர்’ (வர்ம கண்ணாடி-500)

3. ‘நட்சத்திரக் காலத்துக்கும் இரண்டு விரலுக்கு கீழே
அலவு காம்பூரி வர்மம் இதற்கு இரண்டு விரலுக்கு
வலத்தே சிறு தண்டின் பக்கம் கபால வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)

4. ‘காலமாம் கடைக்கண் கீழ் நட்சத்திர காலம்
காலம் கீழ் இரண்டிறையில் காம்பூரிகாலம்’
‘காலமதில் இறைமூன்றில் மூர்த்திக்காலம்’ (வர்ம பீரங்கி-100)

விளக்கம் :

காம்பூரி வர்மமானது நட்சத்திர வர்மத்துக்கு இரண்டு இறைக்கு கீழே அமைந்துள்ளது. மூர்த்தி வர்மத்துக்கு மூன்று இறைக்கு பக்கவாட்டில் அமைந்துள்ளது கபால வர்மத்திலிருந்து இரண்டு இறை மையம் நோக்கி (Medial) அமைந்துள்ளது. In the depression below the Prominance of the Zygomatic Bone on a vertical line drawn down wards from the outer canthus of the Eye

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி