96. கொண்டோடி காலம் – Kondodi Kalam

வேறு பெயர்கள் :

1. பூமி காலம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
2. பூழி காலம் (வர்ம சூத்திரம்-101)
3. மஞ்ஞக்காலம் (வர்ம நூலளவு நூல்)
4. கொண்டோடி காலம் (அடிவர்ம சூட்சம்-500)
5. தம்பன வர்மம் (வர்ம ஆணி-100)

இடம் :

கால் பெருவிரலின் நகக்கண் பகுதியில் உள்ளது.

இருப்பிடம் :

1. ‘சூட்சம் கால் பெருவிரலில் பூமிக்காலம்
பூமியென்ற காலத்துக்கு இருவிரல் மேல்
பொருந்தி நிற்கும் மொழி வர்மம் பாரு’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

2. ‘பாரப்பா பெருவிரல் கண்ணில் பூமிக்காலம்’ (வர்ம நிதானம்-300)

3. ‘கால் கவளிகாலத்துக்கும் மூன்று விரலுக்குக்
கீழே பூமிக்காலம் இது தொடுவர்மம்’ (வர்ம விரலளவு நூல்)

4. ‘நலமான பெருங்கண்ணில் பூழிக்காலம்’ (வர்ம சூத்திரம்-101)

5. ‘பெருவிரல் மஞ்ஞக்காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

6. ‘வித்தடா பெருவிரல் நகக்கண்ணில்
விகிதமாய் அருகுபற்றி தம்பனம் பாரே’ (வர்ம ஆணி-100)

7. ‘ஓமென்ற பெருவிரல் மொழியின் கீழே
ஒருவருக்கும் ஒவ்வாத கொண்டோடிக்காலம்’ (அடிவர்ம சூட்சம்-500)

விளக்கம் :
பெருவிரல் நகக்கண்ணில் இவ்வர்மம் அமைந்துள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி