95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam

வேறு பெயர்கள் :

1. உப்பு குற்றி காலம் (வர்ம கண்ணாடி-500)
2. குத்தி காலம் (அடிவர்ம சூட்சம்-500)

இடம் :

காலின் உப்புகுத்தி பகுதியில் உள்ளது.

பெயர்க்காரணம் :

காலின் உப்பு குத்தி என்றழைக்கப்படும் பகுதியில் இவ்வர்மம் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது.

இருப்பிடம் :

1. ‘மொழிந்தபடி உப்புகுத்தி காலமென்றும்’ (வர்ம கண்ணாடி-500)

2. ‘உள்ளபடி குதிகாலு வர்மமாகும்
உண்டப்பா அதுக்கு நால்விரல் கீழ்
இள்ளுவேன் உப்புக்குற்றிக் காலமாகும்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

3. ‘புகழ் உப்புகுத்தியது குத்திகாலமாகும்’ (அடிவர்ம சூட்சம்-500)

4. ‘தட்டை வர்மத்தினடுத்து உப்புகுற்றி வர்மம்’ (வர்ம ஆணி-108)

5. ‘நலமாக உப்புக் குத்தி காலம் கொண்டால்’ (வர்ம நிதானம்-300)

விளக்கம் : இவ்வர்மம் காலின் உப்பு குத்தி பகுதியில் உள்ளது. இந்த இடம் குதிகால் வர்மத்துக்கு சுமார் நான்கு விரலளவுக்கு கீழே உள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி