93. நாடோடி வர்மம் – Nadodi Varmam
வேறு பெயர்கள் :
1. கைவிரல் மடக்கின வர்மம் (வர்ம விளக்கம்)
2. விரலாடி வர்மம் (பிராண அடக்கம்)
3. நாடோடி வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)
இடம் :
கைக்குழிக்கும் (Arm pit) முன் பக்கமாக உள்ளது.
இருப்பிடம் :
1. ‘கைவிரல் மடக்கின நரம்பு : கைக்குழி மயிர் இருக்கிற தலத்துக்கும் இரண்டு நெல்லிடைக்கு முன்னே இருவிரல் கொண்டு சிறிய நரம்பை பலமாக நுள்ளிப் பிடித்தால்…………..’ (வர்ம விளக்கம்)
2. ‘கம்கூட்டுக்குக் கீழே விரலாடி வர்மம்’ (பிராண அடக்கம்)
3. ‘ எழிலகமே நரம்படியில் நாடோடியாமே’ (அடிவர்ம சூட்சம்-500)
விளக்கம் :
‘வர்ம விளக்கம்’ என்ற நூல் இவ்வர்மம், கைக்குழியின் மயிர் உள்ள இடத்துக்கு ஒரு விரலளவுக்கு முன்பக்கமாக உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இதில் சிறிய நரம்பு இருக்கும். இதை பலமாகக் கிள்ளிப் பிடித்தால் சிறுவிரல் மடங்கும். இந்நரம்பிலிருந்து ஒரு விரலளவுக்கு முன்னே பெரிய நரம்பு உண்டு.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி