91. பொருத்து வர்மம் – Poruthu Varmam

வேறு பெயர்கள் :

1. கைபுஜப் பொருத்து வர்மம் (வர்ம நூலளவு நூல்)
2. பொருத்து வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
3. கை பொருத்து வர்மம் (வர்ம விளக்கம்)
4. செப்பு வர்மம் (வர்ம விரலளவு நூல்)

இடம் :

கையின் புஜமொழிப் (Acromian Process) பகுதியிலிருந்து மூன்று விரலளவுக்கு புறப்பக்கவாட்டில் தாழ்வாக உள்ளது.

பெயர்க்காரணம் :

தோளின் பொருத்து பகுதியில் அமைந்துள்ளதால் புஜ பொருத்து வர்மம் எனப் பெயர் பெற்றது.

இருப்பிடம் :

1. ‘சிப்பி வர்மத்திலிருந்து நேரே மேலே (சுமார் 9 விரலளவு) அளவெடுத்ததால்
கைபுஜ பொருத்து வர்மம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

2. ‘தொட்டகுறி திருநீற்றுக் காலமாகும்
தொடர்ந்து உயரே பார் பொருத்து வர்மம்’. (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

3. ‘போகும் மேல் கை நடுவே முண்டுவர்மம்
புகழும் ஓரிறைக்கு மேலே பொருத்து வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)

4. ‘கைபொருத்து வர்மம் : கைமுண்டாவில்
நின்று மூன்று விரலினும் தாழே பொருத்து வர்மம்’ (வர்ம விளக்கம்)

5. ‘புஜத்திலே செப்பு வர்மம் இதற்கு எட்டு
விரலுக்கு கீழே தவளை வர்மம்’. (வர்ம விரலளவு நூல்)

விளக்கம் :

இவ்வர்மம் கையின் புஜ மொழி பகுதிக்கு (Acromian Process) மூன்று விரலளவுக்கு புறப்பக்கவாட்டில் தாழ்வாக உள்ளது. இது திருநீற்றுக் காலத்திலிருந்து சுமார் 8 விரலளவுக்கு மேலே உள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி