90. (கை)முண்டு வர்மம் – Mundu Varmam

இடம் :

கையின் புஜ மொழி பகுதியிலிருந்து ஏழு விரலுக்கு புறப்பக்கவாட்டில் உள்ளது.

இருப்பிடம் :

1. ‘கைமுண்டாயிலிருந்து ஏழு விரலினும்
தாழே துண்டு வர்மம்’ (வர்ம விளக்கம்)

2. ‘போகும் மேல் கை நடுவே முண்டு வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)

3. ‘தனி துண்டு வர்மமடா பொருத்து வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)

விளக்கம் :

இவ்வர்மம் ‘கைமுண்டா’ எனப்படும் புயமொழியிலிருந்து ஏழு விரலுக்கு புறப்பக்கவாட்டில் தாழ்வாக காணப்படுகிறது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி