89. தவளை வர்மம் – Thavalai Varmam

வேறு பெயர்கள் :

1. முண்டக வர்மம் (வர்ம கண்ணாடி-500)
2. தவளை வர்மம் (வர்ம விரலளவு நூல்)
3. கரி வர்மம் (வர்ம சாரி-205)

இடம் :

இவ்வர்மம் புயப் பகுதியின் மையப் பகுதியில் உள்ளது.

பெயர்க்காரணம் :

இவ்வர்மம் அமைந்துள்ள இடத்தை ‘தவளை‘ என்று அழைப்பதால் இப்பெயர் பெற்றது.

இருப்பிடம் :

1. ‘பூரண கைத்தவளை நடுமுண்டகத்தோள்’ (வர்ம பீரங்கி-100)

2. ‘தொடர்ந்து அதனருகில் முண்டக வர்மம்’ (வர்ம கண்ணாடி-500)

3. ‘புஜத்தினும் தாளே மத்தியில் முண்டக வர்மம்’ (வர்மாணி நாலு மாத்திரை)

4. ‘செப்பு வர்மத்துக்கு எட்டு விரலுக்குக் கீழே
தவளை வர்மம்’ (வர்ம நூலளவு நூல்)

5. ‘எழில் பூர்ண கை தவளை வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)

6. ‘………………………………….. முண்டகத்து வர்மம்
முண்டகத்துக்கு கீழே முட்டினில் முட்டுமொழியாம்’ (வர்ம லாட சூத்திரம்-300)

7. ‘வளமான (கை) துடை நடுவில் கரியின் வர்மம்’ (வர்மசாரி-205)

விளக்கம் :

இவ்வர்மம், கையின் (Arm) மையப்பகுதியில் முன் பக்கமாக உள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி