88. முடக்கு வர்மம் – Mudakku Varmam
வேறு பெயர்கள் :
1. கைமண்டை வர்மம் (வர்ம நூலளவு நூல்)
2. முடக்கு வர்மம் (வர்ம பீரங்கி-100)
இடம் :
முழங்கை மூட்டுப் பகுதியின் முன்பக்கம் உள்ளது.
பெயர்க்காரணம் :
முழங்கை முன்புறமாக மடங்கும் இடத்திலுள்ள வர்மமாகையால் முடக்கு வர்மமெனப் பெயர் பெற்றது.
இருப்பிடம் :
1. ‘கைமூட்டில் சுற்றளவெடுத்து இரண்டாய் மடக்கினால் மேல் பக்கம் (Anterior) கை மண்டைவர்மமும், கீழ்நோக்கி (Posterior) மொழி பொருத்து வர்மமும் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)
2. ‘முட்டுக்குழி மடக்கில் முடக்குவர்மம்’ (வர்ம பீரங்கி-100)
3. ‘ஏகும் முட்டுக்குழி மடக்கு முடக்குவர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)
விளக்கம் :
இவ்வர்மம், கையின் முழங்கை மூட்டு (Elbow-Joint) பகுதியின் முன் பக்கமாக உள்ளது. கையை மடக்குகிற அல்லது முடக்குகிற இடத்தில் இவ்வர்மம் அமைந்துள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி