80. (நகக்)கண்ணு வர்மம் – (Naga) Kannu Varmam

வேறு பெயர்கள் :

1. கண்ணு வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)
2. நகக்கண்ணு வர்மம் (வழக்கு)

பெயர்க்காரணம் :

நகக்கண்ணிலுள்ள வர்மமாகையால் இப்பெயர் பெற்றது.

இடம் :

ஐந்து விரல்களின் நகத்தடியில் உள்ளது.

இருப்பிடம் :

‘அஞ்சு விரல் நகத்தடிகள் கண்ணுவர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)

விளக்கம் :

இவ்வர்மம் ஒவ்வொரு விரல் நகத்தின் அடியிலுள்ள நகக்கண்ணில் அமைந்துள்ளது.

குறிகுணம் :

கண்ணு வர்மம் (1)

கேள்க்கவே கண்ணு வர்மம் குறியேதென்னில்
கெதியான விரலெல்லாம் தரிப்பு உளைச்சல்
வேள்க்கவே மொழி களைக்கும் வீக்கமுண்டாம்
வெடித்திடுகில் சன்னியுடன் மயக்கமாகும்
மீள்க்கவே கண் களைத்து சிகப்பு கொண்டு
மினுக்கமொடு வீக்கமதாம் கண்நோயுண்டாம்
தள்ளவே சிறப்பொடு தாரை விட்டால்
சடுதியாம் சிகப்பறுக்கும் சாந்தமாமே.
கை நகக்கண்ணு வர்மத்தின் குணம் ஏதெனில் விரல்கள் எல்லாம் தரித்து உளையும். மொழி களைத்து வீங்கும். முறிந்தால் சன்னியுடன் மயக்கம் வரும். கண் களைத்து சிவக்கும். கண்நோய் காணும்.

மொழி எல்லாம் தரிக்கும். காய்ச்சல் வரும். மொழி களைக்கும். வீக்கமுண்டாகும். வீங்கி வெடித்தால் சன்னி, மயக்கமுண்டாகும். கண் களைத்து சிவப்பாகும். வீக்கமும், மினுக்கமும் உண்டாகும். கண் நோய் வரும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி