79. அணி வர்மம் – Ani Varmam

வேறு பெயர்கள் :

1. அணி வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. அனியன் வர்மம் (வர்ம சாரி-205)
3. அணியந்த வர்மம் (வர்ம சாரி-205)

இடம் :

நரங்கல் குத்தி வர்மத்துக்கு அருகில் இவ்வர்மம் உள்ளது.

1. ‘மிகு நரங்கல் மீதே அணி வர்மம் அரையிறையில்
மீதாந்தை வர்மமென விளம்புவாரே’ (வர்ம பீரங்கி-100)

2. ‘ஏச்சுதே வில்லுருவி நரம்பு குத்திக் காலம்
இதில் விரல் நாலின் மேல் தான்
காச்சுதே அணி வர்மம் ஆகும் பாரு
கனமான அறையின் மேல் ஆந்தை வர்மம்’ (வர்ம கண்ணாடி-500)

3. ‘அனுமன்யிறையின் கீழ் அணியன் வர்மம்’ (வர்ம சாரி-205)

4. ‘இரண்டான அணியன் வர்மமி ரண்டதாகும்’ (வர்ம சாரி-205)

விளக்கம் :

‘நரங்கல் மீதே அணி வர்மம்’ என்று வர்ம பீரங்கி-100 என்று நூல் குறிப்பிடுவதால் இவ்வர்மம் நரங்கல் குத்து வர்மத்துக்கு மேலே அமைந்துள்ளது என்று புரிந்து கொள்ளலாம். வர்ம கண்ணாடி-500 என்ற நூல் நரம்பு குத்தி வர்மத்துக்கு நாலு விரலுக்கு மேல் இவ்வர்மம் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது. இவ்வர்மம் ஆந்தை வர்மத்துக்கு ஓர் இறைக்குக் கீழாக அமைந்துள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி