69. கை விரிக்காலம் – Kai Viri Kalam

கை விரிக் காலம் (44)

மானமாம் கைவிரி காலம் தானும்
மகிழ்வான குணம் வாய்வு காலம் என்போம்
தானமாம் வாய்வுயென்ற கைவிரி தானமப்பா
தனியெட்டு எல் மீதே குத்தும் கண்டாய்
வானமாம் பனி குளிரும் சீதம் வாய்வு
வந்தடுத்து வேதனைகள் அதிகம் பண்ணும்
பூனமாம் நந்தி என்ற மெழுகால் தீர்க்க
புவனமதில் ஆனதில் இதுக்கு குறியை புகல்வேனே.