61. இறக்கு வர்மம் – Erakku Varmam

இறக்கு வர்மம் (36)

கேள் இறக்கு வர்மமது கொண்டுதானால்
கொடிய புசம் கீழிறங்கும் கொதும்பு போலாம்
வேளிதற்கும் சில நரம்பை பிடித்து மெல்ல
மெதுவான சுக்குபோல் உணக்கும் கண்டாய்
பொழியிறக்கும் வெகுகாலம் சென்றபோது
பொடுபொடனே நரம்பு வலி பித்த தோசம்
விழியிறக்கும் கண்நோய்கள் உண்டாம் பின்னே
விபரமாம் சிகிட்சையினால் நிவிர்த்தியாகும்.