6. குற்றிக் காலம் – Kutti Kalam

வேறு பெயர்கள் :

1. குற்றிக் காலம் (வர்ம சாரி-205)
2. குத்திக் காலம் (வர்ம கண்ணாடி-500)
3. கொம்பு குத்தி வர்மம் (வர்ம வில்லு விசை)

இடம் :

காதின் பின் மேல் பகுதியில் உள்ளது

பெயர்க்காரணம் :

ஆடு, மாடுகளில் காதுகளுக்கு நேரே மேல் பக்கத்தில் கொம்பு முளைத்திருப்பதைக் காணலாம். மனிதர்கள் நேராக நிற்பதால், காதுகளுக்கு பின்புறமாக இப்பகுதி காணப்படுகிறது. மனிதர்களுக்கு கொம்பு இல்லாவிட்டாலும் கொம்பு அமைந்திருந்தால் எந்த இடத்தில் முளைத்திருக்குமோ அந்த இடத்தில் இவ்வர்மம் அமைந்துள்ளதால் இப்பெயர்கள் பெற்றிருக்கலாம்.

இருப்பிடம் :

1. ‘…………………………………………………………….
மகிமையுள்ள பொர்ச்சை என்ற காலமாமே’
‘காலமாம் அதற்கு ஒரு இறைக்கும் கீழே
கனமான குத்தி என்ற காலமாகும்’ (வர்ம கண்ணாடி-500)

2. ‘பாரப்பா இரண்டிறை கீழ் பொற்சைக் காலம்
பகர்ந்த ஓரிறை பற்றி குற்றிக் காலம்’ (வர்மசாரி-205)

3. ‘வலது காதுக்கும் மூன்று விரலுக்கும் உயரே
மோடெலும்பின் சுளியில் கொம்புகுத்திகாலம்’ (வர்ம வில்லு விசை)

விளக்கம் :

இவ்வர்மம் பொற்சை வர்மத்துக்கு ஓர் இறைக்கு கீழாக அமைந்துள்ளது. இதுவும் இரட்டை வர்மமேயாகும் காதின் பின்பக்கத்திலிருந்து மூன்று விரலளவுக்கு பின்புறமாக உள்ள இடத்தில் இவ்வர்மம் அமைந்துள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.