52. சுழுக்கு வர்மம் – Suzhukku Varmam

வேறு பெயர்கள் :
1. சுழுக்கு வர்மம் (வர்ம நிதானம்-500)

இடம் :
நான்கும் ஐந்தும் வாரி எல்லுக்கு இடையில் அமைந்துள்ளது.

இருப்பிடம் :
1. விலாவெல்லில் ஈரெட்டு உடல் சுளுக்கி வர்மம்
வாறரிய வாரி நாலில் சுளுக்கு வர்மம் (அடிவர்ம சூட்சம்)

விளக்கம் :
இவ்வர்மம் நான்காவது விலா எல்லு பொய்கையில் அமைந்துள்ளது.

குறிகுணம் :

சுழுக்கு வர்மம் (27)
போகாத சுழுக்கு வர்மம் கொண்ட பேர்க்கு
பேதித்து புத்தி தடுமாறும் சொன்னோம்
ஆகாத கண்வெருண்டு அயரும் பின்னே
அடிவயிற்றில் வலிகூடும் அண்டம் குத்தும்
வேகாத பொசிப் பொறுக்கும் விதி தப்பாமல்
விண்டபடி நித்திரையை விரும்பிக் கொள்ளும்
சாகாத மூலிகை சாறு பூச தீரும்
சதிவருவது இல்லையடா சார்பு காணே.

சுழுக்கு வர்மத்தின் குணம் ஏதெனில் புத்தி தடுமாறும். கண் வெருண்டு அயரும். அடிவயிற்றில் வலி வரும். அண்டம் வலிக்கும். பசி இருக்காது. எப்போதும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி