46. முன்சருதி வர்மம் – MunSaruthi Varmam

வேறு பெயர்கள் :
1. முன்சருதி வர்மம் (வர்ம லாட சூத்திரம்-300)
2. சுருதி வர்மம் (வர்ம சாரி-205)
3. முன் சுற்றி – புறச்சுற்றி (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

இடம் :
தொப்புளுக்கு பக்கவாட்டில் உள்ளது.

இருப்பிடம் :
1. ‘……………………………………….. சிறிய அத்தி சுருக்கியாகும்
சொல்லுகிறேன் நாலுவிரல் முன் சுருதி வர்மம்’ (வர்ம சாரி-205)

2. ‘இருக்குஞ் சிறிய சுருக்கி மேல் நால்விரல் முன்
எழுஞ் சுருதி வர்மமுடன் பள்ள வர்மம்’ (வர்ம பீரங்கி-100)

3. ‘அத்தி சுருக்கிதான் இதன் பக்கச்சார்வில் தானே’
சார்வில் விரல் நாலது பின் சருதி வர்மம்’ (வர்ம கண்ணாடி-500)

4. ‘தும்மி வர்மத்துக்கும் உந்தி வர்மத்துக்கும் இடைப்பட்ட அளவில் (20 விரலளவு) பாதியளவு (10 விரலளவு) எடுத்து, அதை அடப்ப வர்மத்திலிருந்து கீழ் நோக்கி அளந்தால் கண்டறியப்படும் இடம் சுருதி வர்மமாகும்’ (வர்ம நூலளவு நூல்)

5. ‘போகுமே சுருதி ரண்டு முன் கமுந்தான் ரண்டு’ (வ..ஒ.மு. சாரி-1500)

6. ‘தாமிந்த ஒருவிரல் கீழ் சிறிய அஸ்திசுருக்கி
தயவாக இதன் பக்கம் சரிவிலேதான்’
‘சரிவில் விரல் நாலில் முன் சருதி வர்மம்’ (வர்ம திறவுகோல்-225)

7. ‘கொள்ளவே சிறிய அஸ்திசுருக்கியின் பக்க சரிவில்
மெள்ளவே விரல் நான்கில் மொழிந்த முன் சருதி வர்மம்
நள்ளவே சருதிக்கும் கீழ் நாட்டம் பின் சருதி வர்மம்’ (வர்ம லாட சூத்திரம்-300)

8. ‘ஆகுமே பக்கமது சுற்றித்தானே
அமருமுன் சுற்றி புறச்சுற்றி ரண்டு
ஏகுமே முண்டெல்வர்மம் வலமிடமாகும்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

விளக்கம் :
இவ்வர்மம் சிறிய அத்தி சுருக்கி வர்மத்திலிருந்து நாலு விரலளவுக்கு அகப்பக்கம் (Medial) நோக்கி அமைந்துள்ளது. அடப்ப வர்மத்திலிருந்து சுமார் பத்து விரலளவுக்கு கீழ் அமைந்துள்ளது. உந்தி வர்மத்திலிருந்து சுமார் எட்டு விரலளவுக்குப் பக்கவாட்டில் அமைந்துள்ளது. பல வர்ம நூற்கள் சுருதி அல்லது சருதி வர்மத்ததைப் பற்றி மட்டுமே கூறுகின்றன. வர்ம லாட சூத்திரம்-300, அடிவர்ம சூட்சம்-500 போன்ற சில நூற்கள் இவ்வர்மத்தை முன் சருதி வர்மமென்றும் இதற்குக் கீழே ‘பின் சருதி’ என்றொரு வர்மம் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றன.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி