38. அனுமார் வர்மம் – Hanumar Varmam

வேறு பெயர்கள் :
1. அனுமார் வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. அனுமான் வர்மம் (வர்ம சாரி-205)
3. பத வர்மம் (கெற்ப சாரி சூத்திரம்)
4. அபஸ்தம்பம் (சுஸ்ருத சம்ஹிதா)

இடம் :
முலைக்கண்ணுக்கு நான்கு விரலுக்கு கீழ் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம் :
குரங்கைப் போல உடலை குறுகப் பண்ணுவதால் இப்பெயர் பெற்றது.

இருப்பிடம் :
1. ‘ஆறுமுலைக் கண்ட தூஷிக னிறைக் கீழ்
அனுமார் வர்மம்…………………….’ (வர்ம பீரங்கி-100)

2. ‘தூசிக சுற்றுக்குள்ளே சொன்னோம் அனுமார் வர்மம்’
(வர்ம லாட சூத்திரம்-300)

3. ‘சொன்னபடி எல்லுவர்மம் அனுமார் வர்மம்
தொகுத்தபடி சமீபமது ஆச்சு பாரு’ (வர்ம கண்ணாடி-500)

4. ‘புத்தியென்ற ஓர் மடக்கில் அனுமான் வர்மம்’ (வர்ம சாரி-205)

5. ‘பாங்கான் யந்திர ரண்டு அனுமான் ரண்டு’ (வர்ம சாரி-205)

6. ‘குத்தி என்ற ஓர் மடக்கில் அனுமார் வர்மம்’ (வ.ஒ.மு. சாரி-1500)

7. ‘அனுமார் பிலொரு மடக்கின் கீழே
அப்புறம் அதுபோல அனுமார் வர்மம்’ (வர்மானி-16)

8. ‘காந்தாரி வர்மத்தினும் நான்கு விரலுக்கு இடத்து நீக்கி
ஒன்றரை விரலுக்கு தாப்புறமே பதவர்மம் ஆவர்மத்திற்கு
மூன்று விரலுக்கு தாப்புறமே, ஒன்றரை விரலுக்கு
வலத்து நீக்கி அத்திப்பத வர்மம்’ (கெற்ப சாரி சூத்திரம்)

விளக்கம் :
இது முலையை சுற்றியுள்ள எட்டு வர்மங்களுள் ஒன்று, இது இரட்டை வர்மமாகும். இரு விரலளவுக்கு மேல் அகப்பக்கம் நோக்கி (Supero-Medial) அமைந்துள்ளது. இவ்வர்மம் புத்தி வர்மத்துக்கும் குத்தி வர்மத்துக்கும் இடையில் அமைந்துள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி