35. வசவு வர்மம் – Vasavu Varmam

வேறு பெயர்கள் :
1. உள்புற்று வர்மம் (வர்ம திறவுகோல்-225)
2. உள்புற்றடி வர்மம் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)
3. வசவு வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)
4. கைக்குழி வர்மம் (2-ல் ஒன்று) (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

இடம் :
கைக்குழியின் அருகே உள்ளது.

இருப்பிடம் :
1. ‘பேசு பிறதாரையின் கீழ் குத்துவர்மம்
பிறையான உள்புற்று வர்மமென்றும்’ (வர்ம திறவு கோல்-225)

2. ‘மிதமான கைக்குழியின் அருகு பற்றி
துஞ்சிடவே உள்புற்றடி வர்மம் கொண்டால்’ (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

3. ‘தாரையே பிறதாரை தானதன் கீழே ரண்டு வர்மம்
பூரைய குத்துவர்மம் புகன்ற உள்புற்றும் ஒன்றாம்’ (வர்ம லாட சூத்திரம்-300)

4. ‘எடுத்த கமுக்கூடதிலே குத்து வர்மம்
நின்றதின் ஓர் இறை கீழ் வசவு வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)

5. ‘பொக்கமாய் சொன்ன சித்திர காலத்துக்கும்
புகழ் நாலு விரல் பக்கம் வலமிடமும்’
‘வலமிடமும் கைக்குழி காலம் நாலு’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

விளக்கம் :
இவ்வர்மம் பிறதாரை வர்மத்தின் கீழுள்ள குத்துவர்மத்துக்குக் கீழே அமைந்துள்ளது. இத்தலத்தை ‘அடிவர்ம சூட்சம்-500’ என்ற நூல் ‘வசவு வர்மம்’ என்றழைக்கிறது. ‘வர்ம ஞான ஒடிவு முறிவு சரசூத்திரம்-2200’ என்ற நூல் கைக்குழியின் அருகே உள்புற்றடி வர்மம் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. எனவே இவ்வர்மம் கைக்குழியின் மையத்தில் இல்லாமல், கைக்குழியின் முன் ஒரத்தை ஒட்டியே அமைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. ‘வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200’ குறிப்பிடும் கைக்குழி காலம் நான்கில் (இடது : 2 + வலது : 2) ஒரு ஜோடி உள்புற்று வர்மமும் அடங்கும். (ஒப்பு நோக்குக : குத்து வர்மம்)

காலக்கெடு :
70-90-120-ல் மரணம். (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)
80-90-120-ல் மரணம் (வர்ம துறவுகோல்-225)

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி