1. கதிர்காம வர்மம் – Kathir Kama Varmam

 

வேறு பெயர்கள் :

  1. கதிர்காம வர்மம் (வர்ம சாரி-205)

 

இடம் :

பொருத்து வர்மத்துக்கு இருவிரலளவுக்கு பின்னால்.

 

இருப்பிடம் :

  1. ‘நகையணியும் கழுத்தின் கீழ் கதிர் வர்மம் தான்

நலமான ரண்டிறை கீழ் கதிர் காம வர்மம் தான்

பகையான தோரிரை கீழ் புத்திர வர்மம்

பகர்ந்ததோர் இறைகீழ் சத்தி வர்மம்’   (வ.ஒ.மு. சரசூத்திரம்-1500)

 

  1. ‘கதிர் காம மொன்று புத்திர காலம் ரண்டு’ (வர்ம சாரி-205)

 

  1. ‘கதிரான காலத்துக்கிறையோ ரெண்டில்

கதிர்காம வர்மமொன்றும் சொல்வார் பாரில்’  (வர்ம கண்ணாடி-500)

 

  1. ‘கதிர் வர்மம்

கீழிறை ரண்டில் கதிர் காமமிறை கீழ்பற்றி’

எழுவில் புத்தி…………………..’  (வர்ம பீரங்கி-100)

 

  1. ‘கதிரிலிருவிரல் கீழ் கதிர்காம வர்மம் தானே’   (வர்ம லாட சூத்திரம்-300)

 

விளக்கம் :

இந்த வர்மம் கதிர் வர்மத்துக்கு இரு விரலுக்குக் கீழே உள்ளது என்று பல நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்துக்கு ஒரு விரலுக்குக் கீழே சத்திவர்மம் காணப்படுகிறது. இவ்வர்மத்திற்கு ஓர் இறைக்குப் பக்கவாட்டில் இடது பக்கமும், வலது பக்கமும் புத்தி வர்மங்கள் காணப்படுகின்றன.

 

காலக்கெடு :

3 மாதங்கள்.

 

ஆதார நூல்கள்  1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்

  1. வர்ம மருத்துவம் (சிறப்பு)

 

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.