1. கழலாடி வர்மம் – Kazhaladi Varmam

 

வேறு பெயர்கள் :

  1. மலர் வர்மம் (வர்ம நிதானம்-500)
  2. கழலாடி வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)

 

இடம் :

தொண்டை குழிக்கு இரு விரலளவுக்கு தாழ்வாக உள்ளது.

 

இருப்பிடம் :

  1. ‘தாரவே தொண்டை கீழ்குழிக்கு இருவிரலுக்கு

தாழே தான் சூட்சமாய் மலர் வர்மம்’   (வர்ம நிதானம்)

 

  1. ‘சீர் தொண்டைக்கு இருவிரல் கீழ் கழலாடி வர்மம்

சீரடா இருவிரல் கீழ் கதிர் வர்மம் தான்’      (அடிவர்ம சூட்சம்-500)

 

  1. ‘தொண்டையில் குழிக்கழுத்து காரை எல்லு முடிந்த முட்டில்

மலர் வர்மம் கொண்டால்……’     (வர்ம ஆணி-108)

 

விளக்கம் :

இந்த வர்மம் தொண்டைக் குழியிலுள்ள சுமை வர்மத்திலிருந்து இரண்டு விரலுக்குக் கீழே காரை (Clavicle) என்பு நெஞ்சென்போடு (Sternum) சேரும் இடத்தில் கதிர் வர்மத்திலிருந்து இரண்டு விரலளவுக்கு உயரே காணப்படுகிறது. இவ்வர்மத்தை கழலாடி வர்மம் என்று ‘அடிவர்ம சூட்சம்-500’ என்ற நூல் அழைக்கிறது.

 

காலக்கெடு :

17 நாழிகை (வர்ம ஆணி-108) (ஒரு நாழிகை 24 நிமிடம்)

 

ஆதார நூல்கள்  1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்

  1. வர்ம மருத்துவம் (சிறப்பு)

 

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.