12. அண்ணான் காலம் – Annan Kalam
வேறு பெயர்கள் :
1.அண்ணான் காலம் (வர்ம பீரங்கி-100)
இடம் :
மூர்த்தி வர்மத்துக்கு ஓர் இறைக்கு கீழே.
இருப்பிடம் :
1. ‘…………………..மூர்த்தி வர்மம்
தர்மமடா இறையின் கீழ் அண்ணான் காலம்
தப்பாது மூன்றிறை வலத்தே வெட்டுவர்மம்’ (வர்மசாரி-205)
2. ‘பகரண்ணான் ரண்டு பின்வெட்டி வர்மம் ரண்டு’ (வர்மசாரி-205)
3. ‘கருதும் மூன்றிறை வலத்தே மூர்த்திக்காலம்
தர்மமடா இறையின் கீழ் அண்ணான் காலம்
தக்க மூன்றிறை வலமே வெட்டுவர்மம்’ (வ.ஒ.மு.சாரி-1500)
4. ‘மானென்ற இறை மூன்றில் வலமே மூர்த்தி
மருளரை யிறையின் கீழ் அண்ணான் காலம்’ (அடிவர்ம சூட்சம்-500)
5. ‘காலமதன் வலத்திறை மூர்த்திக்காலம்
கணக்காக மூன்றுள்ளாய் அண்ணான் காலம்’ (வர்ம பீரங்கி-100)
விளக்கம் :
அண்ணான் காலம் மூர்த்தி வர்மத்துக்கு இறைக்குக்கீழே உள்ளது. இவ்வர்மத்திலிருந்து மூன்று இறைக்கு பக்கவாட்டில் (Lateral) (பின்) வெட்டு வர்மம் உள்ளது. இது இரட்டை வர்மமாகும்.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி