107. தும்பிக்காலம் – Thumbi Kalam

வேறு பெயர்கள் :

1. தும்பிக்கால வர்மம் (வர்ம நூலளவு நூல்)
2. கொம்பேறி வர்மம் (வர்ம சூத்திரம்-101)

இடம் :

முழங்காலின் மத்திய பகுதியிலிருந்து சுமார் 5 விரலளவுக்குக் கீழே முன்பக்கமாக உள்ளது.

இருப்பிடம் :

1. ‘குதிரைமுக வர்மத்திலிருந்து (5 விரலளவு) கீழ்நோக்கி
அளக்க தும்பிக்கால வர்மம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

2. ‘……………………………………… குதிரை முகக்காலம்
நாடியதே அங்குலம் தான் நாலின் கீழே
மன்றனவே கொம்பேறி வர்ம மென்றும்
வளமான அதற்கு மூவிரலின் கீழே
ஒன்றனவே முன் நரம்பில் முடிச்சிவர்மம்’ (வர்ம கண்ணாடி-500)

3. ‘…………………………………………… குதிரை முகவர்மம்
……………………………………………………………………….
கண்டாயே அங்குலந்தான் நாலின் கீழே
கடந்திட்டால் கொம்பேறி வர்மமாகும்’ (வர்ம சூத்திரம்-101)

4. ‘ஏகும் முடவு இறைரண்டில் தும்பிகாலம்’ (அடிவர்ம சூட்சம்-500)

5. ‘காலிலே குதிரைமுகக் காலத்தின் கீழ் அங்குலம்
நாலிலே நவிலுவோம் கொம்பேறி வர்மத்தின் தானம்’ (வர்ம லாட சூத்திரம்-300)

விளக்கம் :

முழங்காலின் மத்திய பகுதியிலிருந்து சுமார் நான்கு அல்லது ஐந்து விரலளவுக்குக் கீழே முன்பக்கமாக இவ்வர்மம் உள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி