103. குதிகால் வர்மம் – Kuthikal Varmam
வேறு பெயர்கள் :
1. குதிகால் வர்மம் (வர்ம கண்ணாடி-500)
2. குதி வர்மம் (வர்ம பீரங்கி-100)
3. கரிக்கால் வர்மம் (வ.சூ. பஞ்சீகரண பின்னல்-1500)
4. நரம்பு நடுக்கு வர்மம் (வர்ம நூலளவு நூல்)
5. குழி நரம்பு வர்மம் (வர்ம விளக்கம்)
இடம் :
காலின் குதிகால் பகுதியில் உள்ளது.
பெயர்க்காரணம் :
குதிகால் பகுதியில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.
இருப்பிடம் :
1. ‘கள்ளமில்லா கரண்டை வர்மம் ரண்டுண்டப்பா
கரண்டையதிலிருந்து மூவிரலின் கீழ்
உள்ளபடி குதிகாலு வர்மமாகும்,
உள்ளுவாம் அதுக்கு நால்விரல் கீழ்
இள்ளுவேன் உப்பு குற்றிக்காலமாகும்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
2. ‘காலமாம் விஷநரம்பு குதிகால் காலம்’ (வர்ம பீரங்கி-100)
3. ‘நாய்கால் பொருத்து வர்மத்துக்கு பக்கத்தில்
எட்டுவிரலின் கீழ் குதிகால் வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)
4. ‘வாரப்பா குதிகால் நரம்பதிலே குதிகால் வர்மம்’ (வர்ம நிதானம்-300)
5. ‘வேகு குதிநரம் பதுவே குதிகால் வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)
6. ‘கண்ணுவர்மம் சமீபம் சுற்றளவெடுத்து இரண்டாக மடக்கினால் நரம்பு நடுக்கு வர்மமும், முடிச்சு வர்மமும் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)
7. ‘உப்புக்குற்றிக்கு மேலே குதிகால் நரம்பில்
குதிகால் வர்மம் அல்லது கொம்பேறி வர்மம்’ (வர்ம ஆணி-108)
8. ‘கால் உப்புக்குத்திக்கும் நாலு விரலினும் மேலே
குழிநரம்பு வந்து முடிந்த தலத்தில் குழிநரம்பு வர்மம்’ (வர்ம விளக்கம்)
விளக்கம் :
இவ்வர்மம் குதிகால் பகுதியில் உள்ளது. உப்புகுத்தி வர்மத்திலிருந்து சுமார் நான்கு விரலளவுக்கு மேலே இவ்வர்மம் அமைந்துள்ளது. கரண்டை (கண்ணு) வர்மத்திலிருந்து மூன்று விரலளவுக்கு பின் புறமாக உள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி