100. சுண்டோதரி வர்மம் – Sundothari Varmam

வேறு பெயர்கள் :

1. சுண்டோதரி வர்மம் (வர்ம பீரங்கி-100)

இடம் :

பெருவிரலின் மூட்டுப் பகுதியில் புறப்பக்கவாட்டு சரிவில் உள்ளது.

இருப்பிடம் :

1. ‘……………………………………… விறுதிக்காலம்
இரண்டங்குலம் தீதோர் ரண்டதனில்
பாகமென்ற சுண்டோதரி வர்மம்…….’ (வர்ம பீரங்கி-100)

2. ‘பண்பான தெட்சணை சுண்டோதரியாகும்’ (வர்ம சாரி-205)

3. ‘ஆகும் குண்டங் குலத்திறை ரண்டில் சுண்டோதரியாம்’
(அடிவர்ம சூட்சம்-500)

விளக்கம் :

இவ்வர்மம் பெருவிரலின் மூட்டுப் பகுதியில், புறப்பக்கவாட்டு சரிவில் உள்ளது. விறுதிக்காலம், தெட்சணை வர்மம் ஆகியவற்றின் அருகில் உள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி